சம வேலைக்கு சம ஊதியம்” என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள DPI வளாகம் முன்பு “இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்”
முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் குவிக்கப்பட்டு, கைது செய்வதற்கு வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம், திருவல்லிக்கேணி
காவல் கண்காணிப்பாளர்
ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் மயங்கி விழுந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. போதிய அளவிற்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் காவலர்கள் வாகனத்தில் அவர்களை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகை இட நான்கு திசையிலும் பிரிந்து நின்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் ஆங்காங்கே கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட.னர். ஒரு சிலர் மயங்கி விழுந்ததால் அங்கே
பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆசிரியர்களை கைது செய்து அழைத்துச் செல்ல, அரசு பேருந்துகள் போதாததால் மேலும் பேருந்துகள் வரவழைக்கப்பட்டன.

ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *