அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிஎம் டாஷ்போர்டு என்ற தகவல் பலகை பக்கத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக இருக்கும் என்று தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொருப்பேற்ற பின்னர், முதலமைச்சரின் குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அராசணை வெளியிடப்பட்டுள்ளது. ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு’, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது
தற்போது புதிதாக CM Dashboard என்ற புதிய துறை தொடங்கப்பட உள்ளது. அரசில் உள்ள மக்கள் நல்வாழ்த்துறை, பள்ளிக்கல்வித்துறை என அனைத்துறை துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 என துறை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த துறையில் என்னமாதிரியான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான பணிகள் நடைபெறுகின்றன என்பதை இந்த தகவல் பலகையை ( CM Dashboard ) பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த டேஸ்போர்ட் அடுத்து தலைறைக்கான ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த டேஸ்போர்டை முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்.