சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரி தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அண்ணாமலை பேசியதாவது: சனாதன தர்மத்திற்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
திமுக ஏன் பட்டியலின முதல்வரை பதவியில் அமர வைக்கவில்லை. சனாதன தர்மம் பிற மதங்களுக்கு எப்போதும் எதிரியல்ல. பெண்கள் உடன்கட்டை ஏறுவது சனாதன தர்மம் சொல்லாத ஒன்று. திமுக வந்த பின் தமிழகத்தில் சாதி அரசியல் உருவானது. இவ்வாறு அவர் கூறினார்