அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், ‘சூப்பர் பில்டப் ஏரியா’ அடிப்படையில், வீடுகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களின்போது, நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பரப்பளவை குறிப்பிட்டு ஒரு பத்திரம், கட்டட மதிப்பு குறிப்பிட்டு, கட்டுமான ஒப்பந்த பத்திரம் என, இரு பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டு வந்தன.

வழிமுறைகள்

இந்த முறையை ரத்து செய்து, நிலம், கட்டடம் சேர்த்து மொத்த மதிப்பை குறிப்பிட்டு, ஒரே பத்திரம் பதிவு செய்ய பதிவுத் துறை உத்தரவிட்டது. நேற்று முன்தினம் முதல், இது அமலுக்கு வந்தது. இதில் முத்திரை தீர்வை, பதிவு கட்டண விபரங்களை, பதிவுத் துறை ஏற்கனவே வெளியிட்டது.

இருப்பினும், நிலம், கட்டடத்தின் மொத்த மதிப்பை எப்படி கணக்கிடுவது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பதிவுத் துறை தலைவர் தலைமையில், உயரதிகாரிகள் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், வீடுகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இரு வகைகள்

இது தொடர்பாக, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு:

ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சந்தை மதிப்பு அடிப்படையில், நிலம், கட்டடத்தின் மதிப்புகளை சேர்த்து, வீட்டுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். கூட்டு மதிப்பை நிர்ணயிக்கும் அதிகாரம், அந்தந்த மண்டல டி.ஐ.ஜி.,க்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஏற்ற வகையில், மூன்று விதமான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். அடிப்படை கூட்டு மதிப்பு, ‘பிரீமியம்’ கூட்டு மதிப்பு, ‘அல்ட்ரா பிரீமியம்’ கூட்டு மதிப்பு என, இரு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இதில் அடிப்படை கூட்டு மதிப்பு வழிமுறை, அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பொருந்தும். நீச்சல் குளம், கிளப் ஹவுஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ள குடியிருப்புகளுக்கு, பிரீமியம் கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும்.

10 சதவீதம்

இந்த இரு வகைகளிலும் உள்ள வசதிகளுடன், கூடுதலாக சிறப்பு வசதிகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, ‘அல்ட்ரா பிரீமியம்’ கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். மக்களிடம் மேற்கொள்ளப்படும் கள ஆய்வு, கட்டுமான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் வாயிலாக, இதற்கான தகவல்களை, அதிகாரிகள் பெற வேண்டும்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ‘கார்பெட் ஏரியா’ உள்ளிட்ட, விற்கத்தக்க அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய, ‘சூப்பர் பில்டப் ஏரியா’ அடிப்படையில், அதற்கான கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படும். தனியாக வாகன நிறுத்துமிடம், கிளப் ஹவுஸ், லிப்ட், சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு தனித்தனியாக மதிப்பு பார்க்கக் கூடாது.

இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு அதிகமாக இருப்பதாக கோரிக்கை எழுந்தால், அதை பரிசீலித்து, 10 சதவீதம் வரை குறைக்க, டி.ஐ.ஜி., முடிவு செய்யலாம். இந்த விபரங்கள், மைய வழிகாட்டி குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

‘ஸ்டார் 2.0’ மென்பொருள்

இதற்கு மேல் கூட்டு மதிப்பை குறைக்க வேண்டிய கோரிக்கை எழுந்தால், அது குறித்து மைய வழிகாட்டி குழுவில் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டுவசதி வாரியம், முதல் விற்பனைக்கு பழைய நடைமுறையை பின்பற்றலாம். ஆனால், டிச., 1க்கு பின் நடக்கும் மறுகிரையத்தின்போது, கூட்டு மதிப்பு அடிப்படையில் பத்திரம் இருக்க வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், வீடுகளின் மறுகிரையத்தின்போது கூட்டு மதிப்பை கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த 1 முதல் பதிவாகும் பத்திரங்களில், மதிப்பு தொடர்பான குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க, கூட்டு மதிப்பு கணக்கிடப்படும் வசதி, ‘ஸ்டார் 2.0’ மென்பொருளில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ள

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons