ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ள நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தோ்த் திருவிழா, கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் நம்பெருமாள் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons