தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் உள்ள 56,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளில் மின் அளவீடு பதிவு செய்யும் பணியிலும் 5 சதவீத காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன், மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நேற்று கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தன்னுடைய சொந்த தொகுதிகளாகக் கருதியே திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றும் முதல்-அமைச்சராக பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons