புதியஅம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக 2 ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இன்றைய காலத்தில், வாட்ஸ்ஆப் செயலியில் கோப்புகளை(files)அனுப்புவது தவிர்க்க முடியாததாகஉள்ளது. புகைப்படங்கள், விடியோக்கள், பிடிஎஃப் கோப்புகள் போன்றவைஅதிகம் பரிமாறப்படுகிறது.
இருப்பினும், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 எம்பி அளவுள்ள கோப்பு மட்டுமே வாட்ஸ்ஆப்பில் பகிரமுடியும் என்கிற நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில், விரைவில்இனிஒரே நேரத்தில் 2 ஜிபி அளவிலான பெரிய கோப்பை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், முதல்கட்டமாக இந்த வசதியை அர்ஜென்டினாவில் சோதனை முயற்சியாக செய்தபின், அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.