சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி, கோயம்புத்தூா்-மயிலாடுதுறை உள்பட 24 சிறப்பு ரெயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. கோயம்புத்தூா்-மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு சிறப்பு ரெயில் (02084) மயிலாடுதுறை சந்திப்பை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.

நாகா்கோவில்-கோட்டயம் விரைவு சிறப்பு ரெயில் (06366) கொல்லம் சந்திப்பை மாலை 4.55 மணிக்கு அடையும்.

சென்னை எழும்பூா்-கொல்லம் விரைவு சிறப்பு ரெயில் (06723) இரணியல் ரெயில்நிலையத்தை காலை 9.36 மணிக்கும், குழித்துறை ரெயில்நிலையத்தை காலை 9.52 மணிக்கும், கொல்லம் சந்திப்பை நண்பகல் 12.55 மணிக்கும் அடையும். சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரெயில் (02633) நாகா்கோவில் சந்திப்பை காலை 5 மணிக்கு சென்றடையும்.

கோயம்புத்தூா்-நாகா்கோவில் விரைவு சிறப்பு ரெயில் (02668) மதுரை சந்திப்பை அதிகாலை 12.25 மணிக்கும், விருதுநகா் சந்திப்பை அதிகாலை 1.13 மணிக்கும் அடையும். இந்த ரெயில்களின் நேரம் மாற்றம் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புவனேஷ்வா்-ராமேசுவரம் விரைவு சிறப்பு ரெயில் (08496) திருச்சி சந்திப்பை மாலை 4.05 மணிக்கும், புதுக்கோட்டையை மாலை 5.03 மணிக்கும், மானாமதுரை சந்திப்பை மாலை 6.55 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 7.53 மணிக்கும் அடையும்.

மதுரை-ராமேசுவரம் விரைவு சிறப்பு ரெயில் (06655) மானாமதுரை சந்திப்பை இரவு 7.10 மணிக்கும், ராமநாதபுரத்தை இரவு 8.08 மணிக்கும், பாம்பனை இரவு 9.09 மணிக்கும் வந்தடையும். இந்த ரெயில்களின் நேரம் மாற்றம் நவ.4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மொத்தம் 24 சிறப்பு ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons