மதுரை – ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இயக்கப்படும் மதுரை -ராமேஸ்வரம், ராமேஸ்வரம் -மதுரை வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம் ,பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம் ,உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி ,பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம் ,சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும்.