பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் அபாயகரமான நிலையில் இருந்த மரங்களை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது.

இதுவரை கடந்த மூன்று மாதங்களில் 19,025 மரங்களின் கிளைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளில் 34,224 சாலைகளில் சுமார் 1,75,309 மரங்கள் உள்ளன. மாநகராட்சியின் சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விழும் நிலையில் இருந்த சுமார் 19,025 மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கும், 044-2561 9206, 2561 9207 மற்றும் 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons