ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடி தீர்மானித்தது. ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 தமிழர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என்றது மத்திய அரசு.

இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியது. அதில், கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு எனக் கருத்து தெரிவித்ததோடு, சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனை சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons