சென்னை: புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர்களிடம் விபரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.
அப்போது, புயல், மழையால் ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது. புயல் மழைக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும். உரிய நடவடிக்கையை மாவட்ட கலெக்டர்கள் எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.