பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும் என தனியார் சுயநிதி தொழிற்கல்வி , கலை ,அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது.
இதை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை மறுத்து தடைவிதிக்க முடியாது என அறிவித்துள்ளது