தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 31 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி மேலும் பல்வேறு பரபரப்பான விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.