நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு நவம்பர் 28-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 17-வது மக்களவையின் 7-வது கூட்டத்தொடர் இது.

இதற்கு முன்பு நவம்பர் 28-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போனது. அடுத்தாண்டு உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி அறிவித்தார். இவற்றுக்கு மத்தியில் குளிர்கால கூட்டத் தொடர் கூடவுள்ளதால், இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல், பணவீக்கம், இந்திய-சீன எல்லை விவகாரம் உள்ளிட்டவை கூட்டத்தொடரில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons