தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அமலுக்கு வரும் நடைமுறைகள் என்னென்ன?

அரசு அலுவலங்களில் உள்ள அனைத்து வாழும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்படும். அரசு கட்டிடங்களில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ., எம்.பி.) அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவி ஒப்படைக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும். அனைத்து மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நிலைக்குழுக்கள், பணியாற்றுவதற்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும்.அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்பான சின்னங்கள், வாசகங்கள் மறைக்கப்படும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழித்தல் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். தனிநபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் குறைதீர்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படும்.பறக்கும் படை சோதனையின் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்படும். தனிநபர்கள் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப ரிவர்த்தனை செய்தால் கண்காணிக்கப்படும்.மேற்கண்ட நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons