இந்தியாவில் தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசும் தொழில் துறையில் முன்னேறி செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை ‘மெப்ஸ்’ சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் இந்திய பொருளாதாரம் குறித்தும், தமிழக தொழில் துறை சார்ந்தும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். இதுபற்றி வெங்கையா நாயுடு பேசியதாவது:

தொழில்துறை, உற்பத்தி துறையில் தமிழ்நாடு மிகவும் உயர்ந்து விளங்குவதை நாம் அறிவோம். மோட்டார் வாகன உற்பத்தி அவற்றின் உபபொருட்கள் உற்பத்தியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மேலும், ஜவுளி, தோல் பொருட்கள் உற்பத்தி தொழில், இலகுரக-கனரக இயந்திரவியல், பம்புகள் மற்றும் மோட்டார், மென்பொருள் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

தமிழக மக்கள் இயல்பிலேயே அறிவு நுட்பமும் கடும் உழைப்பும் கொண்டவர்கள். இதனால் ஆட்டோமொபைல், தோல், மென்பொருள், ஜவுளி ஏற்றுமதியில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. அதோது மொத்த ஏற்றுமதியில் நாட்டின் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தற்போது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசும் அந்த திசையை நோக்கி முன்னேறி செல்ல தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2021-22ஆம் நிதியாண்டில் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் 1,32,803 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து 14 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சவால்களை சரிசெய்வார்கள் என நம்புகிறேன். நமக்கான சவால்களை சரிசெய்து வெளிநாடுகளில் நமது ஏற்றுமதியை அதிகரிப்போம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

10ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் புலவர் அவ்வையார் ‛’திரைக்கடல் ஓடி திரவியம் தேடு’ என கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் என்பது கடல் கடந்து செல்வம் சேர்க்க வேண்டும் என்பதாகும். இது இன்றைய காலத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது. இன்று பல்வேறு நாடுகளுடன் நாம் தொழில் செய்து வருகிறோம். அந்நிய செலாவணி ஈட்டுவதற்கும், பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கும் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. 2022ஆம் நிதியாண்டில் 418 பில்லியன் டாலருக்கு சரக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது மிகப்பெரிய சாதனை” என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons