தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சுற்றுலாவுக்கு என பிரத்யேகமாக தனிப் பிரிவை துவக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்களைத் தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. அவற்றில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டில்லி, கோல்கட்டா, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்கள், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 13 ரயில்களைத் தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

இதில் ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளன. கடந்தாண்டு 16 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியிருந்த நிலையில் தற்போது நிறுவனங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இதனையடுத்து தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான ஏலத்தை ரத்து செய்துள்ளதாக லோக்சபாவில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons