தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு பாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது.
பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தலைவர் எல்.பழனியப்பன், மாவட்ட செயலாளர் பாட்சாரவி மாநகர செயலாளர் அறிவு உள்ளிட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வரும் ஜூன் 3, 4, 5ல் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற் உள்ள அக்ரி எக்ஸ்போ 2022கண்காட்சி, கருத்தரங்கம், மாநாட்டில் விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டது.