காவல் நிலையங்களில், குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகள், விசாரணை பட்டியல்கள், ஸ்டேஷன் டைரி, குற்றவாளிகள் குறித்த தகவல்கள், தப்பி ஓடிய நபர்கள், முதல் தகவல் அறிக்கை, கைதான நபர்களின் வாக்குமூலம் என, ஏராளமான ஆவணங்கள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றுடன், முதல்வர் தனிப்பிரிவு, கமிஷனர், எஸ்.பி., அலுவலகம், காவல் நிலையங்களில் தரப்பட்ட புகார்கள், அதன் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆவணம் தயார் செய்ய வேண்டும். அது பற்றி, கடிதம் வாயிலாக, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறையில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், கமிஷனர், எஸ்.பி., அலுவலங்களில் தரப்பட்ட புகார்கள் மற்றும் பிற அனுமதி கோரிய மனுக்கள், காவல் நிலையம் வந்து சேர, அதிக பட்சம் ஒரு வாரம் கூட ஆகிவிடுகிறது.

தற்போது, இந்த நடைமுறையில் மாறுதல் செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, காவல் நிலைய கோப்புகள் அனைத்தும், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் பணி நடந்து வருகிறது.

கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும், மொபைல் போன் உள்ளிட்ட, டிஜிட்டல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக பகிரப்படும். இதன் பொறுப்பு அலுவலர்களாக, அதிகாரிகளின் முகாம் அலுவலக போலீசார் செயல்படுவர் என, கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க