ஜாபர் சாதிக் கூட்டாளிகள்; தனிப்படை தேடுதல் வேட்டை

சென்னை : சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த, 23 பேர் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையை சேர்ந்த தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, மார்ச் 9ல், டில்லியில் கைது செய்யப்பட்டார்.

அவரை ஏழு நாள் காவலில் எடுத்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அவர் அளித்த தகவலின் படி, சென்னையில் பதுங்கி இருந்த கூட்டாளி சதானந்தம், 45, என்பவர் கைது செய்யப்பட்டார். இருவரும் சென்னை பெருங்குடியில் நடத்தி வந்த போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜாபர் சாதிக்கின் மொபைல் போன் மற்றும் இ – மெயில் தொடர்புகள் குறித்து, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதிலிருந்து திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக இருந்தவர்களின் பெயர்களை ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஜாபர் சாதிக்கின், எட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அவர் புதிதாக துவங்கிய ஹோட்டல், தனியார் தங்கும் விடுதி, சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள வீடு உட்பட, ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் பெயர்களில் உள்ள சொத்துக்களின் விபரங்களை சேகரித்து வருகிறேம்.

முகமது சலீம், மைதீன் ஆகியோரை நெருங்கி விட்டோம்; விரைவில் கைது செய்யப்படுவர்.

போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு, ஜாபர் சாதிக்குடன், சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த, 23 பேர் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

அவர்களின் மொபைல் போன், ‘சுவிட் ஆப்’ செய்யபட்டுள்ளது; தலைமறைவாக உள்ளனர்.

அவர்களில், கல்லுாரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்களும் உள்ளனர். போதைப்பொருள் விற்பனை ஏஜன்டாகவும் செயல்பட்டுள்ளனர். அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஜாபர் சாதிக்கின், எட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அவர் புதிதாக துவங்கிய ஹோட்டல், தனியார் தங்கும் விடுதி, சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள வீடு உட்பட, ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் பெயர்களில் உள்ள சொத்துக்களின் விபரங்களை சேகரித்து வருகிறேம்.

முகமது சலீம், மைதீன் ஆகியோரை நெருங்கி விட்டோம்; விரைவில் கைது செய்யப்படுவர்.

போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு, ஜாபர் சாதிக்குடன், சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த, 23 பேர் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons