தமிழ்நாட்டிலுள்ள இருபத்தியோரு மாநகராட்சிகளில் உள்ள பிரச்சனை சேலத்திலும் இருக்கு. அறுபது வார்டுகளில் பெரும்பான்மையாக திமுக ஜெயித்து விட்டதால், மாநகர் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான வழக்கறிஞர் ராஜேந்திரனின் ஆசிபெற்ற கோட்டீஸ்வரர் ராமச்சந்திரன் மேயராக முடிசூடிக்கொண்டார். இதற்காக ராமச்சந்திரன் பலகோடிகளை கொட்டி தீர்த்திருக்கிறார் என்று உடன்பிறப்புகள் மத்தியில் விபரமாக பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதாதேவி மாணிக்கம் துணை மேயராக முடிசூடிக்கொண்டார். கொஞ்சம் வெளிப்படையா சொல்லனும்னா சாரதாதேவி மாணிக்கம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுவிட்டார் அப்படியே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சி துணை மேயர் சீட்ல உட்கார வச்சி இருக்காங்க இதெல்லாமும் வழக்கறிஞர் ராஜேந்திரன் தயவுல நடந்ததாக தோற்ற அதிமுக வேட்பாளர் தரப்புல கிசு கிசுக்கறாங்க.
சேலம் மாநராட்சில ஆரம்பம் முதற்கொண்டே மேயர் ராமச்சந்தரனுக்கும் துணை மேயர் சாரதாதேவி மாணிக்கத்திற்கும் ஒத்துபோகல, எல்லாம் கௌரவம் சார்ந்த பிரச்சனைகள்தான் பதவி ஏற்பு விழாவின்போது சேலம் மாவட்ட பொறுப்பு மந்திரி கே.என்.நேரு, சாரதாதேவி மாணிக்கத்தை மேயர் ராமச்சந்திரன் அருகில் உட்கார வைத்தார் அவ்வளவுதான்! அடுத்த மாமன்ற கூட்டத்திலிருந்து சாரதாதேவி மாணிக்கம் கவுன்சிலர்களோடு உட்கார வைக்கப்பட்டார் அதெல்லாம் முடியாது மேயர் சீட்டு பக்கத்திலதான் உட்காருவேன் என்று அடம் பண்ண, துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் கவுன்சிலர்களோடு கவுன்சிலரா கரைந்துபோனார்.
மேயர் ராமச்சந்திரனோடு உட்கார எனக்கு சீட் போடுங்க என்று, மாவட்ட செயலாளர் ராஜேந்திரனிடம் சக கவுன்சிலர்களோடு போய் முறையிட்டு நியாயம் கேட்டார் சாரதாதேவி மாணிக்கம், பார்க்கிறேன் கேட்கிறேன்னு சொல்லி அனுப்பிவிட்டார் ராஜேந்திரன். எதற்கும் அசராதவராய் மந்திரி கே.என்.நேருவிடம் போய் முறையிட்டார் என்னை மதிப்பதில்லை, கவுன்சிலர்களோடு உட்கார வச்சிட்டாங்க என்று குமுற, கமிஷ்னர் கிருஸ்துதாஸை கூப்பிட்ட மந்திரி நேரு, சாரதாதேவி மாணிக்கத்தை மேயர் ராமச்சந்திரனோடு சீட் போட்டு உட்கார வைக்கச் சொல்லிட்டார். அவ்வளவுதான் அடுத்த அவமரியாதைகள் ஆரம்பமானது.. சாரதாதேவி மாணிக்கம் வணக்கம் வச்சா பதிலுக்கு வணக்கம் வைக்கமாட்டார். வேற பக்கம் முகத்தை திருப்பிக்குவார் எதற்கும் பேசுவதில்லை அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை ஆய்வுக்கு போகும்போது கூப்பிடுவதில்லை இப்படி தன் நடவடிக்கைகளை மேயர் ராமச்சந்திரன் தொடர, தனியாக ஆய்வுக்கு கிளம்பினார் சாரதாதேவி மாணிக்கம், துணை மேயர் கூப்பிட்டால் போககூடாது என்று அதிகாரிகளை தடுத்து விட்டார் மேயர் ராமச்சந்திரன், அதிகாரிகள் வராவிட்டால் என்ன? தான் மட்டும் தனியாக ஆய்வுக்கு கிளம்ப ஆரம்பித்தார் ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திற்கு முதல்நாள் கலைஞர் மாளிகையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கும் அப்பொழுது மாவட்டம் ராஜேந்திரன் ஆட்சிக்கு எதிரா எதுவும் பேசக்கூடாது என்று கவுன்சிலர்களை எச்சரித்து அனுப்புவார் அதன்படியே நடக்கும். துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் ஓவரா ஆட்டம் போடறார் அவரை மாத்திட்டு வேற ஒருத்தரை கொண்டு வரலாம்ன்னு பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்த, திமுக கவுன்சிலர்கள் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு தெரிய, அவர்கள் அறிவாலயம் சென்று கண்ணை கசக்க, வேண்டாம் விட்டுடுங்க என்று அறிவாலயம் சிக்னல் கொடுக்க, தப்பித்தது சாரதாதேவி மாணிக்கத்தின் துணை மேயர் பதவி! மாமன்ற கூட்டத்தில் தீர்மானத்தில் வைக்கப்படும் செலவு கணக்கு பில்கள் பற்றி அதிமுக கவுன்சிலர் டாக்டர் செல்வராஜ் குறிப்பிட்டு கேள்விகள் எழுப்ப, சில தீர்மானங்களையே எடுத்துவிட்டாராம் மேயர் ராமச்சந்திரன். அப்படீன்னா… இதுவேற நடக்குதா? இதெல்லாம் இப்படியே தொடர்ந்தால் திமுக ஆட்சிக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது என்பது மட்டும் உண்மை.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons