சென்னை வேப்பெரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் வருகை புரிந்த நடிகை கௌதமி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரியை சந்தித்தார்,
அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே நடிகை நடிகை கௌதமிக்கி சொந்தமான இடத்தை விட்டு தர தனக்கு அறிமுகமான நபருக்கு நிலத்துக்கான பவர் பட்டா எனப்படும் உரிமையை வழங்கி இருந்த நிலையில் தனது நிலம் குறித்து கேட்கும் போதெல்லாம் சரியான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்,
இந்நிலையில் அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த நடிகை கௌதமி கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸரிடம் புகார் அளித்திருந்த நிலையில் இச்சம்பவம் குறித்த நிலத்தின் ஆவணங்களை சமர்ப்பிக்க நடிகை கௌதமி மற்றும் அவருடைய வழக்கறிஞர் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையரை சந்தித்ததாக கூறப்படுகிறது.