சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து இன்று(நவ.,04) வரை பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் 152 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன.

மழைநீர் தேங்கிய இடங்களில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து கிண்டி வழியாக வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆலந்தூர் மெட்ரோ ரயிலை பொதுமக்கள் பயன்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலூம் அரும்பாக்கம், வடபழனி மெட்ரோ ரயில் நிலையி்ங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons