சென்னை:சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நகரின் நீர் சேமிப்புத் திறனை மேம்படுத்தவும் அடையாறு மற்றும் கோவளம் ஆற்றுப் படுகைகளில் உள்ள 200 நீர் நிலைகளை இணைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், ஆதனூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் போதுமான சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால் 90 சதவீத மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே நீர்நிலைகளை தூர்வாரி இணைப்பு கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.அடையாறு படுகையில் 196 குளங்களில் 134, கோவளம் படுகையில் உள்ள 120 குளங்களில் 66 நீர் நிலைகளை கட்அண்ட் கவர் முறையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரி அதிகப்படியான தண்ணீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வசதியாக தரைமட்டத்திற்கு கீழே மூடப்பட்ட கட்டமைப்புடன் வடிகால் கட்டப்படும். இவற்றை ஜப்பான் சர்வ தேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு தற்போது 22 டி.எம்.சி.யாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் துறை விரிவாக்கம் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் 28 டி.எம்.சி.யாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய நகரின் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிப்பது இன்றியமையாதது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons