உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.

ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது.மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons