சீசன் தொடங்கியதால் திருவாரூரில் கேரள அன்னாசி பழம் விற்பனைக்கு குவிந்துள்ளது. 1 கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. அன்னாசி பழம் பிரேசில் நாட்டை தாயகமாக கொண்டது அன்னாசி பழம். தற்போது அனைத்து நாடுகளிலும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சாகுபடி செய்தாலும் கேரள மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யப்படுகிறது. நடவு செய்த 12 மாதங்களில் பூ பூக்க ஆரம்பிக்கும். 18 மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும். ஒரு எக்டருக்கு 50 டன் வரை பழங்கள் கிடைக்கும். அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. அன்னாசி இலைச்சாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அன்னாசி பழச்சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஒருபக்க தலைவலி, வாய்ப்புண் போன்ற நோய்கள் குணமடையும். அன்னாசி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் பலம் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள அன்னாசி பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். 1 கிலோ ரூ.40-க்கு விற்பனை இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாசி பழம், ஒவ்வொரு சீசன் காலத்திற்கும் திருவாரூர் மாவட்ட பகுதிக்கு லாரி மூலம் விற்பனைக்கு வரும். இதை மினி லாரிகளில் பிரித்து ஏற்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி திருவாரூரில் விற்பனைக்காக கேரள அன்னாசி குவிந்து வைக்கப்பட்டுள்ளது. 1 கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழத்தின் தரத்திற்கு ஏற்றவாறு 1 பழம் ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. சீசன் இல்லாத நாட்களில் ஒரு பழம் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை சற்று குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.40-க்கும், ஒரு பழத்தினை அதன் தரத்திற்கு ஏற்றவாறும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற நாட்களை காட்டிலும் சீசன் காலத்தில் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Byadmin

Feb 14, 2023

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons