சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாதில் இருந்து கொல்லத்துக்கு டிச.8, ஜன.12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிச.24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜன.7-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜன.10, 17-ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜன.14-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து செகந்திராபாதுக்கு டிச.9, ஜன.13, ஜன.20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிச.26, ஜன.2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோட்டயத்துக்கு டிச.1, 8, 29, ஜன.12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், டிச.15, 22, ஜன.5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிச.3, 10, 17, 24, 31, ஜன.7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிச.10, 17, 24, 31 ஜன.7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.11, 18, 25, ஜன.8, 15 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons