நீலகிரி மாவட்டத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் ஏன் விபத்துக்குள்ளான என்று புலனாய்வு செய்ய ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் தயாரிக்கும் குழு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது.

டிசம்பர் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு செய்ய ரஷ்ய ராணுவக் குழு தமிழகம் வர உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் ஏன் விபத்துக்குள்ளான என்று புலனாய்வு செய்ய ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் தயாரிக்கும் குழு நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது.

டிசம்பர் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிய Mi-17V5 ரக ஹெலிகாப்டர் உலகின் பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டராக கருதப்படுகிறது. இது எவ்வித சீதோஷ்ண நிலையிலும் பறக்கக்கூடிய ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் ராணுவ வீரர்கள் பயணம், தீயணைப்பு பணிக்கு உதவுவது, முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்வது, மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது. பிரதமர் முதல் முக்கிய விவிஐபிக்கள் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டரில் அதிபட்சம் 30 பேர் வரை பயணம் செய்யலாம். உலகில் 60 நாடுகள் பயன்படுத்தும் இந்த ஹெலிகாப்டரின் வேகம் மணிக்கு 250 கிமீ வரை 580 கிமீ தூரம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய ஹெலிகாப்டர்களில் தான் நமது நாட்டின் முக்கிய தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் பயணிக்கின்றனர். பேரிடர் நேரங்களில், ரோந்துப்பணிகளில், போர் சமயங்களில், அதி உயரமான மலைப்பிரதேசங்களில் சிக்கியவர்களை மீட்பது என பன்முக தன்மைக்கு இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுவதால் உலகின் பல்வேறு நாடுகள் இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றன.

இந்த பாதுகாப்பு நிறைந்த ஹெலிகாப்டரில்தான் கடந்த டிசம்பர் 8ம் தேதி கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து முப்படைகளின் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், கேப்டன் வருண்சிங் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோர் பயணம் செய்தனர். இந்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய ராணுவ குரூப் கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராணுவ விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் முழு அரசு ராணுவ மரியாதைடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இதற்கிடையே விபத்தில் சிக்கிய Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை சேகரித்த போலீஸார் மற்றும் தடவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதே சமயம் ஹெலிகாப்டரின் முக்கிய பாகம் அதிக எடை கொண்டது என்பதால் மலைப்பகுதியில் இருந்து இதுவரை அப்புறப்படுத்த இயலவில்லை என கூறப்படுகிறது. அதை மீட்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் பாதுகாப்பு நிறைந்த Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி, ஏன் என்று புலனாய்வு செய்வதற்காக ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் குழு தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். இந்த குழுவினர் முழுமையாக ஆய்வு செய்து விபத்துக்கான காரணத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக கூறப்படும் Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர்கள் இதுவரை இந்தியாவில் 6 முறை விபத்தில் சிக்கி உள்ளதாக ஆதாரங்கள் உள்ளது. 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த செய்த 12 பேர் பலியாகினர். 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 9 பேர் உயிரிழந்தனர். 2013ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் மழை பாதிப்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிர் பறிபோனது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் என்ற நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பரிதாபமா உயிரிழந்தனர். 2018ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் பயிற்சியின்போது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துகள் அனைத்திற்குமே தொழில்நுட்ப காரணம் என கூறப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons