லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் ஏற்கெனவே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதுவரை அவருக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில், டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.35 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இவர்களுடைய தண்டனை விவரங்கள் பற்றி பிப்ரவரி 18-ம் தேதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.