தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்படுகின்றது.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு,
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.