மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி – டி1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பயணத்தில் இந்தச் சாதனை குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இதற்காக அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்த அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons