பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழக அரசு இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு. உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார்; உதயநிதி தலைக்கு விலை வைத்ததை கண்டிக்கிறேன். உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் சனாதனி அல்ல. அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள்.

அண்மை காலத்தில் ஒரு சில வன்முறை சம்பவங்களுக்கு திரைப்படங்கள் காரணமாக உள்ளன. திரைப்படங்களில் கருத்துக்களை பக்குவமாக சொல்ல வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த முடியுமா என்பது பற்றி ஆராய்வதற்காகத் தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலின் சாத்தியக்கூறுகள் பற்றி மட்டுமே தற்போது ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது. இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பயன்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டியதில்லை. பாரதம் என்ற வார்த்தை நமது பண்பாட்டை மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது இவ்வாறு கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons