ஆளுநர் ஆர்.என் ரவிவை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து பேரவைக் கூட்டத்தொடருக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், கலைவாணா் அரங்கத்திலேயே நடத்தப்படும் என்று பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் என அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, கலைவாணா் அரங்கத்தில் கூட்டத் தொடா் நடக்கும் என பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் அறிவித்துள்ளாா். ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்றும், அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உறையாற்ற உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பேரவைக்கூட்டர் ஜன.5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில் ஆளுநர் ரவிவை இன்று முறைப்படி சந்தித்து பேரவைத் தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார்.