கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சுப்பிரமணியம் குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் ‘சுகவனேஸ்வரர் கோயில் ஆகமத்தின் அடிப்படையிலானது. அர்ச்சகர் நியமனத்திற்காக இந்த அறிவிப்பில் கோரப்பட்ட விண்ணப்பம் ஆகமத்தின் அடிப்படையில் இல்லை’ என தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி, கோயிலின் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற யாராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என தீர்ப்பு அளித்து இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும் தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். இந்நிலையில் ஆகமம் பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் பல்கிவாலா அமர்வு முன் இன்று(ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள்,முத்து சுப்பிரமணிய குருக்களின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஆகமம் பயின்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

00.jpg” alt=”” width=”177″ height=”300″ class=”alignnone size-medium wp-image-3391″ />

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons