அதிமுக வில் மேலும் ஒரு அணி ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர் விலகல்- புதிய குழு உருவாகிறது
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.அப்போது, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி கூட்டாக அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்து வெளியே வருகிறோம். அதிமுக ஒருங்கிணைப்பு குழு என ஒன்றை அமைத்து அதிமுகவை இணைக்க உள்ளோம்.அதிமுக ஒன்றுபட வேண்டும் என பலர் நினைக்கின்றனர். எப்போதும் எவ்வளவு சதவீதம் வந்தது என பார்ப்போம். ஆனால் தற்போது 7 இடத்தில் டெபாசிட் போய்விட்டது.ஒரு தொகுதியை கூட அதிமுக வெல்லவில்லை. யாரோ அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.இரண்டாம் இடத்திற்கு தேசிய கட்சிகள் வர நாங்கள் அனுமதிக்க முடியாது.திமுகவை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் தயவு செய்து ஒன்றாக சேருங்கள். ஒற்றுமை வேண்டும் என்ற காரணத்திற்காக அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது.தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஈபிஎஸ் ஈகோ பார்க்க வேண்டாம்.இதுபோன்ற தோல்வியை அதிமுக ஒருபோதும் சந்தித்தது இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் ஒன்பதை தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்.தமிழகத்தில் திமுக vs பாஜக என்று இருப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. தேசிய கட்சிகளுக்கு அடி பணிந்தோ, சார்ந்தோ அதிமுகவில் செயல்பட கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.