திருப்பூர்:சிவசேனா கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக அரசின் முத்திரை சின்னமான கோபுர சின்னம் வேண்டாம் என்று இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்பட தமிழக அரசு துறைகளில் தற்பொழுது அறிமுகப்படுத்தி உள்ள மொபைல் ஆப்ஸ் லோகோவில் உள்ள முதல் பக்கத்தில் தமிழக அரசின் கோபுரம் சின்னம் நீக்கப்பட்டு அதனை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மொபைல் ஆப்ஸ் லோகோவில் அரசின் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்கப்பட்டது.ஆனால் கோபுரத்துக்கு உரிமை பட்ட இந்துசமய அறநிலையத்துறை மட்டும் மொபைல் ஆப்ஸ் லோகோவில் கோபுரம் சின்னம் மீண்டும் அமைக்காமல் கோபுரம் சின்னம் வேண்டாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருக்கிறது. இதற்காக இந்துசமயஅறநிலைய துறையை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது. இந்துக்களின் வழிபாட்டு தலங்களான தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வருகின்ற வருமானத்தை வைத்து தான் தமிழக அரசே இயங்கி கொண்டு இருக்கிறது.தமிழக அரசு 1949ம் ஆண்டுகளில் இருந்தே கோபுர சின்னத்தை உபயோகித்து வந்த சூழ்நிலையில் திடீரென்று கோபுர சின்னத்தை அகற்றியது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்குகிறது.வருங்காலத்தில் தமிழக அரசு துறைகளில் எக்காரணத்தை கொண்டும் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது.இந்து சமய அடையாளங்களை அழிக்க நினைக்கும் வகையில் கோபுர சின்னத்தை நீக்க உத்தரவிட்ட இந்து விரோத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இச்செய்தி இந்துக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.ஜனநாயகம் மற்றும் சட்டரீதியாகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons