விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையை உருவாக்கும் மாநாடு என பிஆர் பாண்டியன் கூறினார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நம்மாழ்வார் சீடர் பள்ளத்தூர் முருகையன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் எம்.மணி வரவேற்றார். மாநில தலைவர்
எல் பழனியப்பன். மாவட்ட தலைவர் துரை பாஸ்கரன், தஞ்சை மாநகர செயலாளர் அறிவு முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர்
பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசும்போது
வரும் ஜூன் 3,4,5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் மாநாடு, தமிழகத்தில் வேளாண்மையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும் மாநாடாக அமைய உள்ளது. இந்தியாவின் புகழ் மிகுந்த வல்லுனர்கள் அம் மாநாட்டில் பங்கேற்று கருத்துரை வழங்க உள்ளார்கள்.
விவசாயத்தை தொழிலாகவும், வருமானத்தை உயர்த்தும் நோக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
பாரம்பரிய விவசாய தொழில் நுட்பங்களையும், இயந்திர பண்பாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கோடு இம்மாநாடு அமைகிறது.
விண்வெளி,வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள், வேளாண் விஞ்ஞானிகள்,ஏற்றுமதி இறக்குமதி குறித்தான மத்திய மாநில அதிகாரிகள்,உலக நாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் பங்கேற்று கருத்துரை வழங்க உள்ளார்கள்.
நிலவரி,நீர் வரி ரத்து செய்து விவசாயிகளுக்கு அங்கீகாரமில்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,இம்மாநாடுவிவசாயிகள் வரி செலுத்தும் தகுதியை உருவாக்க வழி காட்டும் மாநாடாக அக்ரி எக்ஸ்போ 2022 வழிவகுக்கும் என்கிற நம்பிக்கையோடு விவசாயிகள் அணிதிரண்டு வர வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மாநாடு வெற்றி பெற உரிய ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
கூட்டத்தில் மதுக்கூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை. பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 20 க்கும் மேற்பட்டோர் தன்னை சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.