கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:திருமாவளவன் குடியை நிறுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறாரா ? அல்லது புது முடிச்சு போட அழைப்பு விடுக்கிறாரா ? என்று எனக்கு தெரியவில்லை.ஆனால், புதிய முடிச்சுக்காததான் அதிமுக, விஜய் கட்சிக்கு எல்லாம் திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் என்னவென்றால் மதவாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க மாட்டாராம்.மத்தியில் ஆளும் பாஜகவை மதவாத கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை. இது அப்பட்டமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டுவதற்கும், புதிய அணியை திரட்டுவதற்கும் தான் திருமாவளவனின் புதிய யுக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால், மது தான் இவர்களது கொள்கை என்றால், ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் என்ன செய்துக் கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி உள்பட போதையால் பல பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.மதுபோதையில் தான் தமிழகத்தில் அத்தனை பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. திடீரென திருமாவளவனுக்கு ஒரு ஞானோதயம் வந்திருக்கிறது. இந்த ஞானோதயம் எதற்கு வந்திருக்கிறது என்றால், 2026ம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் வந்ததின் பேரில், ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு மது ஒழிப்பை ஒரு காரணமாக அவர் சொல்கிறார்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

The short URL of the present article is: https://reportertoday.in/51em

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons