பாராளுன்றத்தில் நேற்று நடத்த மக்களவைக் கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார். இதனைப் பார்த்த கிரண் ரிஜிஜூ தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ராகுல் காந்தி தூங்குவதைச் சுட்டிக்காட்டினார். உடனே, கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர். ராகுல் காந்தி தூங்கும் நிலையில் உள்ள அந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றன. ராகுல்காந்தி கண்களை மூடியபடி அமர்த்திருந்தாரா அல்லது தூங்கிக்கொண்டிருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக நாட்டில் உள்ள பல்வேறு சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது, வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதல் உள்ளிட்ட 44 திருத்தங்களை வக்பு சட்டத்தில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன

The short URL of the present article is: https://reportertoday.in/vaju

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons