பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டத்தை தீவிர படுத்துவோம் போராட்டக் குழு முடிவு
பி.ஆர்.பாண்டியன்
தகவல்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சென்னை தலைமை அலுவலகத்தில் தலைவர்
பிஆர்.பாண்டியன் அவர்களை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு நிர்வாகிகள் இன்று 18.09.2022 சென்னை பெசன்ட் நகரில் சந்தித்து பேசினர்.சந்திப்பு குறித்து பிஆர்.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் போது 13 கிராமங்கள் அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்பட்டுள்ளது .
73 ஏரிகள் அதன் உபரி நீர் கால்வாய் செம்பரபாக்கம் ஏரியில் கலந்து சென்னைக்கு குடி நீராக பயன்படுகிறது. இவற்றில்13 ஏரிகள் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி இணைப்பு கால்வாய் 7 கிமீ முழுவதும் விமான நிலையம் அமைப்பதற்கு கைப்பற்றப்படுகிறது.
இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
மக்கள் வாழ்வாதாரங்கள் இழக்க உள்ளனர். பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகான உயர்தரமான வீடுகள்,150க்கும் கோவில்கள், சர்ச்சுகள் இடிக்கப்பட உள்ளன.
மக்கள் அகதிகளாக வெளியேறும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி 54 நாட்களாக தொடர்ந்து ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறோம்.
நேற்று 13 கிராமங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் காவல்துறை தடையை மீறிஉண்ணாவிரதம் இருந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருக்கிறோம் இப்பராட்டத்தை துவக்கி வைக்க வருகை தந்த தங்களை வழி மறித்து தடுத்து நிறுத்தியதை வன்மையாக கண்டிப்பதாகவும், அது குறித்து தன்னிடம் வருத்தத்தையு தெரிவித்தனர்.
இத்திட்டத்தை கைவிடுகிறோம் என முதலமைச்சர் அறிவிக்க முன்வர வேண்டும். அதுவரையிலும் போராட்டத்தை தீவிர படுத்த உள்ளோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்க
உள்ளோம்.
இதுவரையிலும் அமைச்சர்களோ, உயர் அதிகரிகளோ எங்களிடம் கருத்து கேட்கவில்லை. எதேச்சதிகாரமாக சட்டம் போட்டு காவல்துறையை வைத்து மிரட்டி எங்களை அகதிகளாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது, இது குறித்து வாய் திறக்க முதலமைச்சர் மறுப்பது வேதனையளிக்கிறது.
கடந்த அஇஅதிமுக காலத்தில் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது அன்றைய எதிர் கட்சியாக இருந்த திமுக தான். ஆனால் இன்றைக்கு அவர்கள் ஆளுங்கட்சியாக வந்த பிறகு திட்டத்தை செயல்படுத்த வக்ர புத்தியுடன் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது
இதனால் எங்களுக்கு போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை எனப் போராட்ட குழு மிகுந்த வேதனை தெரிவித்தது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என உறுதியோடு தெரிவித்துள்ளனர்
மேற்கண்டவாறு போராட்ட குழு தெரிவித்துள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்டல தலைவர் விகேவி துரைசாமி உடன் இருந்தார்