தற்போது பல இடங்களிலும் தற்காலிக கண்டெய்னர் கட்டிடங்கள் பெருகி வருகிறது. விலை குறைவாகவும் எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடதிக்ரு கொண்டு செல்ல கூடியதாகவும் இருப்பதால் பலர் இந்த கண்டெய்னர் கட்டிடங்களை உருவாக்கி வருகின்றனர்.கண்டெய்னர் விடுதி, உணவகங்கள் உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது. முலுகு மாவட்டத்தில் உள்ள கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளிக் கட்டடம் கட்ட வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அப்பகுதியில் மழை பெய்தால் குழந்தைகள் படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அப்பகுதியில் புதிய பள்ளி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் புதுமையாக யோசித்து கண்டெய்னர் பள்ளிக்கூடத்தை மாவட்ட ஆட்சியர் உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதே முலுகு மாவட்டத்தில் போச்சாபூர் கிராமத்தில் மருத்துவமனை வேண்டும் என்ற பழங்குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க கண்டெய்னர் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பழங்குடி மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
The short URL of the present article is: https://reportertoday.in/x3l8