டிஜிட்டல் சுகாதார அட்டை
சில தகவல்கள்!
****
ஆதார் கார்டு போலவே ஒரு அட்டைதான் இது! டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்படும்.
ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும். அதில் அவர் செய்த பரிசோதனைகள்,நோய் குறித்த விவரம், சந்தித்த மருத்துவர்கள், எடுத்துக் கொண்ட மருந்துகள் மற்றும் நோயறிதல் குறித்த தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்படும்.
ஒருவேளை நோயாளி,ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்றாலும் இந்த அட்டை மூலம் அவர் புதிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது எளிதாகும்.
இதேபோல், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது என்பது மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் எளிதாகும். ஆதார் மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களைக் கொண்டு உருவாக்கப்படும் சுகாதார அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை வழங்கும்.
சுகாதார அடையாள எண், டிஜி மருத்துவர், தொலைதூர மருத்துவம், மின்-மருந்தகம், சுகாதாரசேவைப் பதிவகம், டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மருத்துவக் கோப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கி தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் இருக்கும்.
இதனை பிரதமர் துவங்கி வைத்துள்ளார்.
****