சென்னை முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலி அடுத்தாண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய (சியுஎம்டிஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகின்றனர்.இத்தகைய பயண சீட்டிற்கு மாற்றாக இவை அனைத்தும் ஒரே பயண சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ள பட உள்ளது.

இதற்காக பிரத்தியேக மொபைல் செயலி உருவாக்கப்பட உள்ளது. இந்தச் செயலியில் பலதரப்பட்ட பயணங்களுக்கான ஒரேபயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். இந்தசெயலி அடுத்தாண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய (சியுஎம்டிஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது,

“இந்த செயலியை உருவாக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை மூவிஸ் டெக் இன்னோவேஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் சியுஎம்டிஏ வழங்கியது. செயலியை உருவாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு அதனை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணமாக சைதாப்பேட்டையில் இருந்து தலைமைச் செயலகம் ஒருவர் செல்ல உள்ளார். அப்போது அவர் இந்த செயலியில் தான் புறப்பட வேண்டிய இடத்தையும் சேர வேண்டிய இடத்தையும் பதிவிட்டால் அவர் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரை மெட்ரோ ரயிலில் சென்று அங்கிருந்து அரசு பேருந்தில் தலைமைச் செயலகம் செல்லலாம் என்பதை அவருக்கு காண்பிக்கும்.

மேலும் அப்போதே சைதாப்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயில் புறப்படும் நேரத்தையும் அந்த ரயிலில் அவர் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தை அடையும் நேரம், அங்கிருந்து அவருக்கு தலைமைச் செயலகத்துக்கு அரசு பேருந்து புறப்படும் நேரம் மற்றும் அந்த பேருந்து தலைமைச் செயலகத்தை அடையும் நேரம் ஆகியவற்றை காண்பித்து விடும். எனவே இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேருந்தின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளதா? அவ்வாறு இருப்பின் அதனை ஒருங்கிணைந்த செயலியில் இணைப்பதில் எதும் பிரச்னை உள்ளதா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டிசம்பரில் இந்த செயலி தயாராகிவிடும் அதனைத் தொடர்ந்து ஜனவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்திய ரயில்வேயுடனும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

முதலில் இந்த செய்தியானது புறநகர் மின்சார ரயில்களுக்காக தினசரி ஒருங்கிணைந்த பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து சீசன் பயணச்சீட்டுகளும் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். தங் களது பயணத்தின் கடைசி கட்டமாக ஆட்டோக்களை தேடும் பயணிகளுக்காக நம்ம யாத்திரி ஆட்டோ எனும் வசதியும் இருக்கும்.

இவ்வாறு சியுஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The short URL of the present article is: https://reportertoday.in/5bu7

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons