தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 11 வயது சிறுவனான அதிஸ்ராம், சாம்பின் பட்டத்தை வென்றுள்ளார்.
Silambam South India சார்பில் திருச்செந்தூரில் 12.3.22 அன்று நேஷனல் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2022 , டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலம்பம் கோப்பை 2022 போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், இப்போட்டியில் மதுரையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஜெ.அதீஸ் ராம் தனித்திறன் பிரிவில் முதல் பரிசை வென்றுள்ளார். இவர் ஏற்கனவே மாநில, தேசிய, சர்வதேச சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார்.
இவரது திறனை பாராட்டி சிலம்பத்தில் பல உலக சாதனைகள் மற்றும் பல வெற்றிகள் பெற்றதற்கான உலகளாவிய குழந்தை சாதனையாளர் விருதை (Global Kids Achievers Award-2021) பத்மஸ்ரீ டாக்டர்.விஜயகுமார் ஷா இணையவழி நிகழ்வில் வழங்கினார்.
இவர் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றமைக்காக 72வது குடியரசு தினவிழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அன்பழகன் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். ஸ்கேட்டிங் ஒட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது இவரது தனிச் சிறப்பு. கூடுதலாக வில் வித்தையிலும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.