சென்னையில் கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதி கோயம்பேடு அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.