தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். ரசிகர்களை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

ஆனால் கடந்த ஆண்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டதாகவும், கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா ஆகியோர் நியமிக்கப் பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இந்த கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிய நடிகர் விஜய், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தவும், கட்சி செயல்பாடுகளில் ஈடுபடவும் தடை விதிக்குமாறு சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், எஸ்.ஏ.சந்திசேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் விஜயின் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.

கலைக்கப்படுவது ரசிகர் அமைப்பா, கட்சியா என விஜய் ரசிகர்களிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
****

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons