Category: மருத்துவம்

“சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 வருடமாக பீடித்து கொண்டிருந்த கொரோனாவைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.…

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து: அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பதற்றம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தி வருகிறார்கள். தீ விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. தீ விபத்துக்குள்ளான இடம், அறுவை சிகிச்சை…

‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதல்வர்’ -மா.சுப்பிரமணியன் தகவல்

70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த இரண்டு முன்களப் பணியாளர்களின்…

சேனலின் லிங்க் இதோ!

REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/channel/UCZQWONXzWtnQsMUn4lP723A

4 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளார். அந்த பெண் ஏற்கனவே இரு…

ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு – சென்னை வந்தடைந்தது மத்திய குழு

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்பட 17 மாநிலங்களில் பரவியுள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார்.…

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அபாயப் பட்டியலில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், அபாயப் பட்டிலில் அல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை…

ஒமைக்ரான் பரவல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக…

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை: மத்திய அரசு

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தென் ஆப்பிக்கா…

தரப் பரிசோதனையில் 36 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 36 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து…

மேலும் படிக்க