சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. முன்னதாக சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர், செங்குன்றம், புழல், மாதவரம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவல்லிகேணி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.