தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4-வது வார்டில் உள் நோயாளியை பார்க்க வந்தவர்களின் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அந்த மருத்துமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.